தற்போதைய கொவிட் வைரசு தொற்று அச்சுறுத்தலுக்கு மத்தியில், மாணவர்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் பாடசாலைகளை விரைவாக ஆரம்பிக்கும் நிலை இல்லை என கல்வி அமைச்சர் ஜி.எல் பீரிஸ் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் நேற்று (23) உரையாற்றியபோதே கல்வி அமைச்சர் இவ்வாறு கூறினார்.
மருத்துவத் துறை விசேட நிபுணர்களின் ஆலோசனைப்படி பாடசாலைகளை மீளத் திறப்பதற்குரிய திகதி தீர்மானிக்கப்படும் என்று தெரிவித்த அமைச்சர், தற்போதைய கொவிட் தொற்று அச்சுறுத்தல் இலங்கைக்கு மாத்திரம் விசேடமான ஒன்றல்ல. உலக நாடுகளில் பல இதற்கு தீர்வை காண்பதில் ஈடுபட்டிருப்பதாகவும் தெரிவித்தார்