‘Madinian 94 Foundation’ அமைப்பு மடவளை மதீன பாடசாலை பிரதி அதிபரை சந்திப்பு
கண்டி – மடவளை மதீனா தேசிய பாடசாலையின் பல அபிவிருத்தி வேலைத் திட்டங்களில் பங்குகொள்ளும் ‘Madinian 94 Foundation’ அமைப்பின் செயற்குழு உறுப்பினர்கள் பாடசாலையின் பிரதி அதிபர் அவர்களை இன்று (17) அதிபர் காரியாலத்தில் சந்தித்து கலந்துரையாடல் ஒன்றை நடாத்தினர்.
இந்தக் கலந்துரையாடலில் பாடசாலையில் கல்வி மேம்பாடு,,மனிவள தேவைப்பாடு,, ஒழுக்க விழுமிய மேம்பாடு, பெளதீக வளத் தேவைப்பாடுகள் என பல கோணங்களில் கருத்துப்பரிமாறல் மேற்கொள்ளப்பட்டன.
பாடசாலையின் வளாகத்தை முழுமையாக சுற்றிப் பார்த்த Madinian 94 Foundation உறுப்பினரகள் முக்கிய தேவைகளையும் அடையாளப்படுத்தினர். கிட்டிய எதிர்காலத்தில் மிக்கிய வேலைத் திட்டங்களை ஆரம்பிப்பதாகவும் பிரதி அதிபரிடம் குறிப்பிட்டனர்.
பாடசாலையின் நலன்களில் முடியுமான அளவு கைகோர்த்து செயற்பட தமது அமைப்பு தயார் என்பதனையும் ஞாபகப்படுத்தினர்.