crossorigin="anonymous">
உள்நாடுபொது

இராணுவத்தினால் “மட்டக்களப்பு கெம்பஸ்” அதன் ஸ்தாபகர் ஹிஸ்புழ்ழாஹ்விடம் கையளிப்பு

"மட்டக்களப்பு கெம்பஸ்” யில் தங்கியிருந்த இராணுவம் வெளியேறியது

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களின் உத்தரவின் பேரில் இன்று (20) “மட்டக்களப்பு கெம்பஸ்” இல் தங்கியிருந்த இராணுவம் அதனை முன்னாள் ஆளுநர், மட்டக்களப்பு கெம்பஸ் இன் ஸ்தாபகர் கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புழ்ழாஹ் அவர்களிடம் கையளித்துவிட்டு வெளியேறினார்கள்.

கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதலை அடுத்து “மட்டக்களப்பு கெம்பஸ்” இராணுவத்தின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டது

மட்டக்களப்பு பல்கலைக்கழகம் அதனை தொடர்ந்து நாட்டில் ஏற்பட்ட கொரோனா தொற்று சிகிச்சை நிலையமாகவும் பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில் இராணுவத்தின் கட்டுப்பாட்டிலேயே இருந்து வந்தது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer + 10 = 13

Back to top button
error: