crossorigin="anonymous">
உள்நாடுபொது

பங்களாதேஷ் சபாநாயகர் ஷிரின் ஷர்மின் சவுத்ரி – இலங்கை சபாநாயரை சந்திப்பு

உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்துள்ள பங்களாதேஷ் சபாநாயகர் கௌரவ (கலாநிதி) ஷிரின் ஷர்மின் சவுத்ரி (Shirin Sharmin Chaudhury) மற்றும் இலங்கை பாராளுமன்ற சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கும் இடையில் சந்திப்பொன்று அண்மையில் (18) பாராளுமன்றத்தில் இடம்பெற்றது.

இதன்போது பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர மற்றும் இலங்கைக்கான பங்களாதேஷ் உயர்ஸ்தானிகர் தாரிக் மொஹமட் அரிஃபுல் இஸ்லாம் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை குறுகிய காலத்தில் சமாளித்தமை தொடர்பில் பங்களாதேஷ் சபாநாயகர் கௌரவ (கலாநிதி) ஷிரின் ஷர்மின் சவுத்ரி இதன்போது பாராட்டுக்களைத் தெரிவித்தார்.

மேலும், 2024 ஆம் ஆண்டு ஆரம்பத்தில் இடம்பெறவுள்ள பங்களாதேஷ் பாராளுமன்றத் தேர்தலை அடுத்து இரு நாடுகளுக்குமிடையிலான பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தை மீள்புதுப்பிக்க எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

அத்துடன், சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தனவை பங்களாதேஷுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளுமாறும் பங்களாதேஷ் சபாநாயகர் இதன்போது அழைப்பு விடுத்தார்.

இரு நாடுகளினதும் பாராளுமன்ற முறைமை, சுகாதாரச் சேவை, கைத்தொழில் துறை, சுற்றுலாத் துறை, முதலீடு மற்றும் ஏற்றுமதி போன்ற விடயங்கள் தொடர்பில் இரு தரப்பினரிடையே கலந்துரையாடல் இடம்பெற்றது.

இந்தச் சந்திப்பை அடுத்து பங்களாதேஷ் சபாநாயகர் கௌரவ (கலாநிதி) ஷிரின் ஷர்மின் சவுத்ரி பாராளுமன்றத்தின் விசேட விருந்தினருக்கான குறிப்புப் புத்தகத்திலும் கையொப்பமிட்டார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 52 − 46 =

Back to top button
error: