மடவளை சிரேஷ்ட பிரஜைகள் சங்கத்தின் உலக முதியோர் தின வைபவம்
கண்டி – மடவளை சிரேஷ்ட பிரஜைகள் சங்கத்தின் 11ஆவது உலக முதியோர் தினம் இன்று ஓக்டேபர் முதலாம் திகதி நடைபெற உள்ளது.
மடவளை சிரேஷ்ட பிரஜைகள் சங்கம், 11ஆவது தடவையாக உலக முதியோர் தினத்தை, ஒக்டோபர் மாதம் 1ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இன்று மு.ப.9.00 மணிக்கு, மடவளை மதீனா தேசிய பாடசாலையின், அஷ்ர்ஃப் ஞாபகார்த்த கேட்போர் கூடத்தில் நடாத்தவுள்ளது.
இவ்வைபவத்திற்குப் பிரதம அதிதியாகக வன பாதுகாப்பு திணைக்களத்தின் ஆராய்ச்சிப் பிரிவு அதிகாரியான எம்.எல்.எம். சுஹ்ரி அவர்களும், கௌரவ அதிதிகளாக, சட்டத்தரணி ஜனாபா. எச்.எம். பாத்திமா அஸ்னா அவர்களும், கலந்து கொள்வர். இன்னும் பல பிரமுகர்கள் விசேட அதிதிகளாகக் கலந்து கொள்ள உள்ளனர்.
இவ் வைபவத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட குறை வருமானம் கொண்ட 25 முதியோர்களுக்கு பெறுமதிமிக்க போஷாக்கு உணவுப் பொதிகளும் வழங்கப்பட உள்ளன.
நீண்டகாலம் அரச சேவையில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஏ.எச்.எம். சித்தீக் (அதிபர்) பிரதி அதிபர், ஜே.எம்.யாசீன் (பிரதி அதிபர்), எச்எம். பாஸி (கிராம சேவகர்) ஏ.எம். சாஹிர் (இலங்கை மின்சார சபை) ஆகியோரும் பாராட்டி கௌரவிக்கப்பட உள்ளனர்..
சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு சிறுவர்கள் பலர் கௌரவிக்கப்பட உள்ளனர். அதாவது 2022ஆம் ஆண்டு, ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற மடவளை அல் முனவ்வரா ஆரம்ப பாடசாலையைச் சேர்ந்த 25 மாணவர்கள் , பதக்கங்கள் அணிவிக்கப்பட்டு, பரிசுகள் வழங்கிப் பாராட்டப்படவுள்ளனர்.
2021ஆம் ஆண்டு க.பொ.த. (சா/த) பரீட்சையில் ஆங்கில பாடத்தில் ‘ஏ’ சித்தி பெற்று உயர் தரத்திற்கு தகுதி பெற்ற 10 மாணவர்களுக்கு, காலம் சென்ற திருமதி எஸ் ஜலீல் ஆசிரியை நினைவுப் பரிசும் வழங்கப்படும்.
க.பொ.த. உயர் தரம்,சாதாரண தரம் மற்றும் தரம் 5 புலமைப் பரீட்சையிலும் சாதனைகள் படைத்த மாணவர்களுக்கு விஷேட பரிசுகள் வழங்கப்பட உள்ளதாக மேற்படி அமைப்பின் செயலாளரும் ஓய்வு பெற்ற பிரதிக் கல்விப் பணிப்பாளருமான ஏ.எல்.ஏ. ஜலீல் தெரிவித்தார்.