மடவளை பஸார் வை.எம்.எம்.ஏ.யின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம் ஆரம்பம்
கண்டி – மடவளையில் தேசிய மீலாத் தினத்தை முன்னிட்டு மடவளை பஸார் வை.எம்.எம்.ஏ. (YMMA) அமைப்பின் ஏற்பாட்டில் 17வது தடவையாகவும் இன்று 28 ஆம் திகதி வியாழக்கிழமை மாபெரும் இரத்ததான முகாமை நடத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மடவளை பஸார் வை.எம்.எ.ஏ அமைப்பின் பொதுச் செயலாளர் ஏ.எம்.ஹசன் பிராஸ் தெரிவித்தார்
அமைப்பின் தலைவர் அல்ஹாஜ் ஏ.எல்.எம். ரிஷாட் தலைமையில் காலை 8.00 தொடக்கம் மாலை 3.00 மணி வரை மடவளையில் அமைந்திருக்கும் சன்சைன் (sunshine) திருமண மண்டபத்தில் இரத்ததான முகாம் நடைபெறவுள்ளது
நிகழ்வில் பிரதம அதிதியாக அகில இலங்கை வை.எம்.எம்.ஏ. பேரவையின் தேசிய தலைவர் அல்ஹாஜ் இஹ்ஸான் ஏ ஹமீத் அவர்களும், கௌரவ அதிதியாக வர்த்தக உரிமையாளர் திரு, ஞானசம்பந்தன் ராஜேந்திரன் ஐயா அவர்களும். விசேட அதிதிகளாக மடவளை பஸார் ஜாமிஉல் ஹைராத் ஜூம்ஆ பள்ளி வாசல் தலைவரும் அகில இலங்கை மொத்த சில்லறை வியாபார சங்கங்களின் தலைவருமான அல்ஹாஜ் டப்ளியு.எம். நஜீம் அவர்களும். மடவளை ஜப்பான் நலன்புரி சங்கத்தின் தலைவர் அல்ஹாஜ் முலப்பர் முகம்மது ரிப்தி அவர்களும் கலந்து கொண்டு நிழ்வை ஆரம்பித்து வைக்க உள்ளனர்
இரத்ததான முகாமில் பிரதேச வாழ் அனைத்து சமூகத்தினரும் கலந்துகொண்டு இரத்ததானம் செய்ய முன்வருமாறு ஏற்பாட்டுக்குழு வேண்டுகோள் விடுக்கின்றது அன்றைய தினம் இரத்ததானம் வழங்குபவர்களுக்கு சான்றிதழ்களும் நினைவுச் சின்னங்களும் வழங்கிவைக்கப்படவுள்ளன.