(அஷ்ரப் ஏ சமத்)
கொள்ளுப்பிட்டி ஜூம்ஆப் பள்ளிவாசலில் மீலாதுன் நபி நிகழ்வுகள் நேற்று (28) நடைபெற்றது.
நிகழ்வுக்கு பிரதம அதிதியாக பிரதம மந்திரி தினேஸ் குணவர்த்தன அவர்கள் கலந்து கொண்டார்.
இந் நிகழ்வில் ்இப்பிரதேச வாழ் மூவினமான 3000 குடும்பங்களுக்கு உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன
கொள்ளுப்பிட்டி ஜூமஆப் பள்ளிவாசல் தலைவர் முஸ்லிம் சலாஹூதீன், முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம். பௌசி, அர்க்கம் உவைஸ் முன்னாள் வெளிநாட்டுத்துாதுவர் அண்சார் இப்ராஹீமும் அங்கு பிரசன்னமாகியிருந்தனர்.
ஜூம்ஆப் பள்ளிவாசலின் பிரதான பேஸ் இமமாம்களின் சொற்பொழிவு துஆப் பிராத்தனையும் இடம் பெற்றது. அத்துடன் பாடசாலை மாணவிகளுக்கு பரிசுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.