பிராந்தியம்
வட மாகாண உள்ளூர் உற்பத்தியாளர்களின் சுற்றுலாக் கண்காட்சி
வட மாகாண சுற்றுலா பணியகமும் தொழில் துறை திணைக்களமும் இணைந்து நடாத்தும் உலக சுற்றுலா தினத்தினை முன்னிட்டு மாறிவரும் சுற்றுலா வளர்ச்சியில் வட மாகாண உள்ளூர் உற்பத்தியாளர்களின் உற்பத்திகளை சந்தைப்படுத்தும் சுற்றுலாக் கண்காட்சி இன்று (29) யாழ் மத்திய கலாச்சார மையத்தில் வட மாகாண சுற்றுலாப் பணியகத்தின் தலைவர் தலைமையில் நடைபெற்றது.
இவ் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் அ.சிவபாலசுந்தரன் கலந்துகொண்டார்.
இக் கண்காட்சியில் உள்ளூர் உற்பத்தியாளர்கள் உற்பத்தி செய்துள்ள பொருட்களின் கூடாரங்கள், ணவுசார்ந்த பொருட்களும், கைவினை சார்ந்த உற்பத்தி பொருட்களும் காட்சிப்படுத்தப்பட்டன.