இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் கஸகஸ்தான் ஜனாதிபதி கஸீம் ஜோமார்ட் (Kassym-Jomart Tokayev) இடையிலான இருதரப்பு பேச்சுவார்த்தை (28) பேர்லின் நகரில் இடம்பெற்றது.
“உலகளாவிய பொருளாதார மாற்றங்களை எதிர்கொள்வதில் கஸகஸ்தானின் பங்கு” என்ற தலைப்பில் அரச தலைவர் கூட்டத்தொடர் கஸகஸ்தான் ஜனாதிபதி Kassym-Jomart Tokayev தலைமையில் “Berlin Global” மாநாட்டுக்கு இணைந்த வகையில் நடைபெற்றதுடன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் அதில் இணைந்துகொண்டார்.
இந்நிகழ்வில் தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, ஜனாதிபதியின் பொருளாதார விவகாரங்களுக்கான சிரேஷ்ட ஆலோசகர் கலாநிதி ஆர்.எச்.எஸ். சமரதுங்க, வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அருணி விஜேவர்தன ஆகியோரும் கலந்துகொண்டனர்