பிராந்தியம்
மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியின் “மைக் வோக்” நடைபவனி
மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரி சமூகம் மற்றும் கல்லூரியின் பழைய மாணவர் சங்கம் என்பன இணைந்து கல்லூரியின் 150 வது ஆண்டு நிறைவினை முன்னிட்டு நடாத்தும் “மைக் வோக்” நடைபவனி நேற்று (30) சனிக்கிழமை கல்லூரி வளாகத்திலிருந்து நாய்ப்பெற்றது
இப் பவனியை மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயரும், புனித மிக்கேல் கல்லூரி பழைய மாணவர் சங்கப் போஷகருமான யோசப் பொன்னையா ஆண்டகை ஆரம்பித்து வைத்தார்.
நடை பவனி கல்லூரியில் இருந்து ஆரம்பமாகி திருமலை வீதி வழியாக தாண்டவன்வெளி வரை சென்று அரசடியை அடைந்து அங்கிருந்து மீண்டும் கல்லூரியை சென்றடைந்தது.
“மைக் வோக்” நடைபவனி கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்றது