இலங்கையில் திருகோணமலை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் கரையோர மக்களினதும் பாடசாலை மாணவர்களினதும் தயார்நிலையை பரிசோதிப்பதற்காக பிராந்திய சுனாமி ஒத்திகை பயிற்சியொன்று 2023 ஒக்டோபர் 04 ஆம் திகதி இன்று புதன்கிழமை இடம்பெறவுள்ளதாக இலங்கை பாராளுமன்ற பிரதி சபாநாயகர் கௌரவ அஜித் ராஜபக்ஷ நேற்று (03) பாராளுமன்றத்தில் அறிவித்தார்.
அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தினால் இலங்கையினுள் தாபிக்கப்பட்டுள்ள தேசிய மட்டத்திலிருந்து கிராமிய மட்டம் வரையான சுனாமி ஆரம்ப ஆபத்து நிலையை எதிர்வுகூறும் பொறிமுறையை மதிப்பீடு செய்யும் நோக்கத்தில் இந்தப் பயிற்சி இடம்பெறுவதாக பிரதி சபாநாயகர் அறிவித்தார்.
கரையோர மாவட்டங்களை பிரதிநித்துவம் செய்கின்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட அனைத்து கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் அறிவிக்குமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தினால் கோரிக்கையொன்று விடு்க்கப்பட்டு்ள்ளதாகவும் பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக் குறிப்பிட்டார்.