உத்தேச இணையதள பாதுகாப்பு சட்டமூலம் தொடர்பாக ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா ஃபோரம் தனது ஆழ்ந்த கவலை தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது
ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா ஃபோரம் வெளியிட்டுள்ள (03) அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது
“இந் நாட்டில் கருத்து வெளியிடல் சுதந்திரம் மற்றும் டிஜிட்டல் பாவனை தனியுரிமை என்பவற்றைக் கேள்விக் உட்படுத்தச்செய்யும் இலங்கையில் விரைவில் அமுல்படுத்தப்படவுள்ள உத்தேச இணையதள பாதுகாப்பு சட்டமூலம் தொடர்பாக ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா ஃபோரம் தனது ஆழ்ந்த கவலையை வெளியிடுகிறது
தனியுரிமை, தனிநபர்களின் பாதுகாப்பு , தனிப்பட்ட தகவல் என்பவற்றைப் பற்றிய மற்றும் எதிர்காலத்தில் அரசாங்கம் மேற்கொள்ளவுள்ள கண்காணிப்பு என்பன பற்றிய ஆதங்கத்தை ஏற்படுத்தும் வகையில் இந்த சட்டமூலம் பாவனையாளரை பாதிப்புக்குள்ளாக்கின்றது.
தற்போது வெளியிடப்பட்டுள்ள இந்த இணையதள பாதுகாப்பு சட்டமூலம் சிவில் உரிமைகளைப் பேணும் அழைப்புக்கள் மற்றும் டிஜிட்டல் உரிமைகளைப் பாதுகாக்கும் தாபனங்கள் என்பவற்றின் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இணைய தள பாதுகாப்பினை உறுதிப்படுத்தல் மற்றும் தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கங்களை அப்புறப்படுத்த மேற்கொள்ளும் நடவடிக்கைகளை நாம் அங்கீகரிக்கும் அதேவேளை இந்த சட்டமூலத்தின் தற்போதைய வடிவம் அலுவலக இணையதள செயற்பாடுகளை தணிக்கை செய்தல் மற்றும் கட்டுப்படுத்தல் போன்றவைகளுக்காக அதற்கு மிதமிஞ்சிய அதிகாரத்தை கொண்டுள்ளதாக புலன்படுவதை எடுத்துரைக்கின்றோம்.
சுயாதீன மேற்பார்வை பொறிமுறையொன்று இந்நகலில் உள்ளடக்கப்படாமை காரணமாக அரசாங்கம் இணையதள அமைப்புகள் மற்றும் உள்ளடக்க விடயங்களின் அவதானிப்பு என்பவற்றை கண்காணித்தல் ஊடாக தனது கட்டுப்பாட்டை அதிகரிக்கும் வாய்ப்பும் காணப்படுகின்றது.
எனவே, தற்போது அரசினால் முன்வைக்கப்பட்டுள்ள இணையதள பாதுகாப்பு நகலினை சீர்படுத்த அரசாங்கம் தனது நிலைப்பாட்டை மாற்ற மீள் கருத்தைக் கொள்ளுமாறு ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா ஃபோரம் வேண்டுவதுடன்
இதற்காக சம்பந்தப்பட்ட தரப்புக்களான சிவில் சமூகத்தினர் டிஜிட்டல் உரிமை பாதுகாப்பாளர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர்களுடன் ஆக்கப்பூர்வமான கலந்தாலோசனைகளை மேற்கொண்டு இணையதள பாதுகாப்பு , கருத்து வெளியிடல் சுதந்திரம் உள்ளிட்ட சகல அடிப்படை மனித உரிமைகளையும் உறுதிப்படுத்தும் இரு தரப்பினரிடையேயான கருத்தொருப்புடன் சமநிலையைப் பேணி இந்த நகலை சீர்படுத்துமாறு மீண்டும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா ஃபோரம் அரசுக்கு அறைகூவல் விடுகின்றது.
இந்த சட்ட மூலத்தினால் கொள்ளப்பட வேண்டிய சில முக்கியமான சில விடயங்கள் கீழ் வருமாறு,
வெளிப்படைத்தன்மை இல்லாமை
தீங்கேற்படுவதுடன் உள்ளடக்கங்கள் மற்றும் பொய்த்தகவல் என்பன விளக்கமோ ,வியாக்கியானமோ வழங்கப்படாமை.இத்தகையதொரு சட்டமூலம் உள்ளடக்கங்களை அகற்றவும் ,தன்மையை அமுல்படுத்தவம் வழிகோலும்.
கருத்து வெளியிடல் சுதந்திரத்திற்கான அச்சுறுத்தல்.
கருத்து வேறுபாடு மற்றும் அபிப்பிராய பேதம் என்பவற்றை அடக்குதல், கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்தை கட்டுப்படுத்தல், அரசியல் செயற்பாடுகளை திணறடிக்க செய்தல், மற்றும் விமர்சனத்தை கட்டுப்படுத்தல் போன்ற தேவையற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள இச்சட்ட மூலம் எதிர்காலத்தில் அரசாங்கத்திற்கு ஒரு கருவியாக செயற்படலாம்.
வெளிநாடுகளில் பின்பற்றப்படும் இந்த இணையதள பாதுகாப்பு விதிமுறைகளை இடுவதுடன் இந்த டிஜிட்டல் யுகத்தில் , இந்நாட்டின் பிரஜைகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் தனது நிலையை கடப்பாட்டை முழுமையாக பேணுமாறு நாம் அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம். – என்.எம்.அமீன், தலைவர் ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா ஃபோரம்” என ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா ஃபோரம் வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது