லிட்ரோ சமையல் எரிவாயு விலை நேற்று (04) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில், அதிகரிக்கப்பட்டுள்ளது.
12.5 கிலோகிராம் லிட்ரோ எரிவாயு விலை 343 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 3470 ரூபா என அறிவிக்கப்பட்டுள்ளது.
5 கிலோகிராம் எரிவாயு விலை 137 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 1393 ரூபா என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
2.3 கிலோகிராம் எரிவாயு 63 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு, அதன் புதிய விலை 650 ரூபா என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, Laugfs எரிவாயு விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
12.5 கிலோகிராம் Laugfs எரிவாயு விலை 150 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 3985 ரூபாவாகும்.
5 கிலோகிராம் எரிவாயுவின் விலை 60 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 1595 ரூபாவாகும்.