நிகழ்நிலை காப்பு சட்டமூலத்துக்கு எதிராக இலங்கை உழைக்கும் ஊடகவியலாளர்கள் சங்கம் (Sri Lanka Working Journalists’ Association) (03) உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்துள்ளது.
இலங்கை உழைக்கும் ஊடகவியலாளர்கள் சங்கம், சங்கத்தின் தலைவர் துமிந்த சம்பத், முன்னாள் தலைவர்/நிறைவேற்றுக் குழு உறுப்பினர் லசந்த ருஹுனுகே மற்றும் பொருளாளர் டி.நடராசா ஆகியோர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளனர்.
இலக்கம் SC SD 67/2023 இன் கீழான இம் மனுவில் பிரதிவாதியாக சட்டமா அதிபர் குறிப்பிடப்பட்டுள்ளதுடன், வழக்கில் ஜனாதிபதி சட்டத்தரணி கலாநிதி ஜயம்பதி விக்கிரமரத்ன ஆஜராக உள்ளார்.
கடந்த செப்டம்பர் 18ஆம் திகதி வர்த்தமானியில் நிகழ்நிலை காப்பு சட்டமூலம் வெளியிடப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.