crossorigin="anonymous">
உள்நாடுபொது

நசீர் அஹமட்டை நீக்கியமை சட்டபூர்வமான தீர்மானம் – உயர் நீதிமன்றம்

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் உறுப்புரிமையில் இருந்து நசீர் அஹமட்டை நீக்கியமை, சரியானதும் சட்டபூர்வமானதுமான தீர்மானம் என, உயர் நீதிமன்றம் இன்று (06) தீர்ப்பளித்துள்ளது.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் உறுப்புரிமையில் இருந்து நசீர் அஹமட்டை நீக்கியமை தொடர்பில், கட்சியின் செயலாளர் நாயகம் ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர், நசீர் அஹமட்டிற்கு அனுப்பிய கடிதத்தை சவாலுக்குட்படுத்தி, உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று நிராகரிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், உயர் நீதிமன்ற தீர்ப்பானது சரித்திர முக்கியத்துவம் வாய்ந்ததென ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

கடந்த 25 வருடங்களாக கட்சி மாறுகின்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் நீதிமன்றத்தில் தங்களுக்கு சாதகமான தீர்ப்புகளை தான் பெற்று வந்திருக்கிறார்கள். ஆகையால், இது அதற்கு மாறுபட்ட ஒரு தீர்ப்பாக அமைந்துள்ளது எனஎம்.ஏ.சுமந்திரன் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, அமைச்சுப் பதவிக்காக கட்சி மாறுபவர்களுக்கு இதுவொரு எச்சரிக்கையாக இருக்கும் என ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகம் ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர் தெரிவித்தார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 1 + 8 =

Back to top button
error: