(ராபி சிஹாப்தீன்)
அக்குறணை நகரம் மற்றும் அதனை அண்டிய பிரதேசத்தில் நேற்று தொடர்ச்சியாக பெய்த மழை காரணமாக அக்குறணை நகரை அண்மித்து ஓடும் பிங்கா ஓயா நேற்று இரவு (08) பெருக்கெடுத்ததில் அக்குறணை நகர பிரதேசம் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு நீரில் மூழ்கியது
அக்குறணை நகரின் சியா வைத்தியசாலை சந்தியில் சுமார் இரண்டு அடி உயரம் வரையும் நகரின் ஏனைய பகுதிகளில் சுமார் ஒரு உயரம் அடி வரையும் வெள்ளநீர் மட்டம் உயர்ந்து காணப்பட்டதாக பிரதேசவாசிகள் தெரிவித்தனர்
நகரில் காணப்படும் வியாபார நிலையங்களுக்குள் வெள்ளம் புகுந்ததில் பொருள் சேதங்கள் ஏற்பட்டுள்ளதுடன் இச்செய்தி எழுதப்படும் வரை ஏற்பட்ட சேதங்கள் குறித்த மதிப்பீடுகள் மேற்கொள்ளப்படவில்லை
அக்குறணை நகம் மற்றும் அதனை அண்டிய பிரதேசத்தில் வருடாவருடம் தொடர்ச்சியாக ஏற்பட்டுவரும் இந்த வெள்ளப்பெருக்கு காரணமாக தொடர்ச்சியாக பொருளாதார இழப்புக்களுக்கு முகம்கொடுக்கவேண்டியுள்ளதாக அக்குறணை நகம் மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களில் வியாபாரத்தில் ஈடுபட்டுவரும் வர்த்தகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து உரிய கவனம் செலுத்தி தீர்வொன்ற நடைமுறைப்படுத்த முன்வர வேண்டும் என அக்குறணை நகம் மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களில் வியாபாரத்தில் ஈடுபட்டுவரும் வர்த்தகர்கள் உற்பட பிரதேசவாசிகள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.