ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் (SLMMF) “ஊடகங்கள் மற்றும் பொதுமக்கள் மீது நிகழ்நிலை காப்பு சட்டமூலத்தின் தாக்கம்” (Impact of Online Safty Bill on Media and Public) தொடர்பான கலந்துரையாடலொன்றை இம்மாதம் எதிர்வரும் 12ம் திகதி வியாழக்கிழமை கொழும்பு-05, இலக்கம் 96, நாரஹேன்பிட்டியவில் அமைந்துள்ள இலங்கை பாத்திரிகை ஸ்தாபனத்தில் (SLPI) பி.ப. 05.00 மணி முதல் நடத்துவதற்கு ஏற்பாடு செய்துள்ளது
“ஊடகங்கள் மற்றும் பொதுமக்கள் மீது நிகழ்நிலை காப்பு சட்டமூலத்தின் தாக்கம்” தொடர்பான கலந்துரையாடலில் பேராசிரியர் ரொஹான் சமரஜீவ (Professor Rohan Samarajeeva) கலந்துகொண்டு குறித்த சட்டமூலம் தொடர்பான கருத்துக்களை முவைக்கவுள்ளார்
ஊடகவியலாளர்கள், சமூக ஊடக செயற்பாட்டாளர்கள், பொதுமக்கள் உற்பட ஆர்வமுள்ள அனைவரும் கலந்துகொண்டு பயன்பெறுமாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் வேண்டுகின்றது.