இந்து சமுத்திர எல்லை நாடுகளின் சங்கத்தின் (IORA) அமைச்சர்கள் மட்டக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக இலங்கைக்கு வருகை தந்துள்ள தென்னாபிரிக்காவின் வெளிவிவகார அமைச்சர் கலாநிதி நலேடி பெண்டோருக்கும் (Dr. Naledi Pandor) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு நேற்று இடம்பெற்றது.
உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவிற்கு தென்னாபிரிக்கா வழங்கிய ஆதரவுக்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி, IORA தலைவர் என்ற வகையில் இந்து சமுத்திரப் பிராந்தியத்தின் தனித்துவத்தை வலுப்படுத்த எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.