crossorigin="anonymous">
உள்நாடுபொது

அலி ஸாஹிர் மௌலானா பாராளுமன்ற உறுப்பினராக நியமிணம்

தேர்தல்கள் ஆணைக்குழு அதி விசேட வர்த்தமானி வெளியீடு

அலி ஸாஹிர் மௌலானா பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளதாக, தேர்தல்கள் ஆணைக்குழு அதி விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

முன்னாள் சுற்றாடல் அமைச்சர் நசீர் அஹமட்டின் பாராளுமன்ற உறுப்பினர் பதவி வறிதானதைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ள வெற்றிடத்திற்கு அலி ஸாஹிர் மௌலானா நியமிக்கப்பட்டுள்ளதாக, தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அதி விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் நசீர் அஹமட் அரசாங்கத்திற்கு ஆதரவாக கட்சி முடிவுக்கு மாற்றமாக செயற்பட்டமை தொடர்பில் அவரது கட்சி உறுப்புரிமை நீக்க ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி தீர்மானம் எடுத்திருந்தது.

இதற்கு எதிராக தாக்கல் செய்த வழக்கிற்கு அமை, குறித்த முடிவு செல்லுபடியானது என உயர் நீதிமன்றம் கடந்த வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்திருந்தது.

ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நசீர் அஹமட் கடந்த பாராளுமன்றத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து பாராளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், அக்கட்சியில் போட்டியிட்டு விருப்பு வாக்குகளின் அடிப்படையில் அடுத்த இடத்திலுள்ள அலி ஸாஹிர் மெளலானா, தற்போது பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer − 7 = 2

Back to top button
error: