crossorigin="anonymous">
உள்நாடுபொது

இந்து சமுத்திரம் வளர்ந்துவரும் உலக பொருளாதாரத்திற்குள் முக்கிய பங்கு வகிக்கிறது

"Galle Dialogue 2023 - International Maritime Conference," சர்வதேச மாநாட்டில் ஜனாதிபதி ரணில்

ஆரம்ப காலம் முதலே சிறப்புமிக்க கேந்திர நிலையமாக விளங்கும் இந்து சமுத்திரமானது வளர்ந்துவரும் உலக பொருளாதாரத்திற்குள் முக்கியமான பங்கு வகிப்பதாகவும், உலக அரசியலுக்குள் எடுக்கப்படும் தீர்மானங்களே அதன் எதிர்காலத்தை தீர்மானிக்கும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

காலி ஜெட்வின் ஹோட்டலில் நேற்று (12) நடைபெற்ற “காலி கலந்துரையாடல் 2023” “Galle Dialogue 2023 – International Maritime Conference,” சர்வதேச மாநாட்டிலேயே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

எமக்குரிய கலசாரம், வர்த்தகம் மற்றும் ஒன்றோடு ஒன்று பிணைந்து காணப்படும் நாகரிக பாரம்பரியத்தை கொண்ட இந்து சமுத்திரத்தின் ஒற்றுமையை எவராலும் சிதைக்கவோ துடைத்தெறியவோ முடியாதெனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

இம்முறை “இந்து சமுத்திரத்தில் உருவாகும் புதிய ஒழுங்கு முறை” தொனிப்பொருளின் கீழ் 11 சர்வதேச அமைப்புகள் மற்றும் 44 நாடுகளின் சமுத்திரவியல் பிரதிநிதிகள் மற்றும் கடற்படை பிரதானிகளின் பங்கேற்புடன் நேற்றும் இன்றும் (13) இந்த நிகழ்வு நடைபெறுகிறது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer + 82 = 91

Back to top button
error: