crossorigin="anonymous">
பிராந்தியம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் 1000 தென்னங்கன்றுகள் நடும் நிகழ்ச்சி திட்டம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆயிரம் தென்னங் கன்றுகளை நடும் நிகழ்ச்சி திட்டத்தின் முதல் கட்ட நிகழ்வு புதுக்குடியிருப்பில் அமைந்துள்ள தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் மட்டக்களப்பு மாவட்ட தொழில் பயிற்சி நிலைய வளாகத்தில் நேற்று (12) இடம் பெற்றது.

தென்னை மற்றும் பனை செய்கையினை ஊக்குவித்தல் மற்றும் அவை சார்ந்த கைத்தொழில் பண்டங்களின் உற்பத்திகளை அதிகரிக்க செய்யும் நோக்கில் இளைஞர் தேசிய மன்றம் மற்றும் புது குடியிருப்பு பயிற்சி நிலையம் ஆகியன இணைந்து ஏற்பாடு செய்திருந்த நிகழ்வில் 200 தென்னம் கன்றுகள் நடுகை செய்யப்பட்டன.

இந் நிகழ்வில் மாவட்ட நிர்வாக பணிப்பாளர் மனுல சமல் பெரேரா, மாவட்ட பனை பிரிவு பிரதி பனிப்பாளர் கே.விராஜ், நிர்வாக உதவி பணிப்பாளர் உ.நிர்மாலி மற்றும் ஊழியர்கள், பயிற்றுவிப்பாளர்கள், நிலையத்தில் பயிற்சி பெறும் அழகுகலை நிபுணர்கள் என பலரும் கலந்துகொண்டு தென்னங் கன்றுகளை நட்டு வைத்தனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 68 + = 77

Back to top button
error: