இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு இலவச விசாவை வழங்க இலங்கை அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.
இலவச விசாவை ஐந்து நாடுகளில் இருந்து இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு வழங்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது
இந்தியா, சீனா, ரஷ்யா, தாய்லாந்து, இந்தோனேசியா ஆகிய நாடுகளின் பிரஜைகளிடம் விசாவிற்கான கட்டணத்தை அறவிடவேண்டாமென உத்தரவிடப்பட்டுள்ளது.
சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிக்கும் நோக்கில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் பிரியந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்