crossorigin="anonymous">
உள்நாடுபொது

இந்தியா – இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து நிறுத்தம்

இந்தியா – நாகப்பட்டினம் மற்றும் இலங்கை காங்கேசன்துறை இடையே ஆரம்பிக்கப்பட்ட பயணிகள் கப்பல் போக்குவரத்து நாளை (20) நிறுத்தப்படவுள்ளதாக இந்திய துறைமுக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தியா – நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து, இலங்கை காங்கேசன் துறைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து இம்மாதம் கடந்த 14ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது.

இந்தக் கப்பலில் பயணம் செய்ய முன்பதிவு செய்பவர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்ததால், வாரம் முழுவதும் இயக்கப்படுவதற்குப் பதிலாக, திங்கள், புதன், வெள்ளிக்கிழமைகளில் மட்டும் பயணிகள் கப்பல் இயக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

2024 ஜனவரி முதல் மீண்டும் கப்பல் போக்குவரத்து தொடங்கும் என இந்தியா துறைமுக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer − 2 = 6

Back to top button
error: