தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்க, அரச கரும மொழிகள் திணைக்களத்தில் கல்வி பயிலும் மாணவர்களின் இன நல்லிணக்க நிகழ்வு கிளிநொச்சி மாவட்ட செயலக பயிற்சி நிலையத்தில் இன்று (21) சனிக்கிழமை நடைபெற்றது.
பொலனறுவை பிரதேசத்தில் சிறுவர் கழகங்களில் தமிழ் மொழி கற்கும் மாணவர்களுக்கும், கிளிநொச்சியில் அரச கரும மொழி தேர்ச்சிக்கான சிங்கள மொழி கற்கும் அரச உத்தியோகத்தர்களுக்கும் இடையில் இன நல்லிணக்கத்தை வலுப்படுத்தும் வகையில் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதன்போது சிங்கள, தமிழ் பாரம்பரிய முறைப்படி கற்கைநெறி மாணவர்கள் வரவேற்கப்பட்டனர்.
தொடர்ந்து, சிங்கள தமிழ் பாரம்பரிய உணவுகள் பரிமாறப்பட்டதுடன், பல்வேறுபட்ட கலை நிகழ்வுகளும் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் அரச கரும மொழிகள் திணைக்களத்தின் போதனாசிரியர்கள், அரச கரும மொழிகள் திணைக்கள கிளிநொச்சி மாவட்ட இணைப்பாளர், சிங்கள தமிழ் கற்கை நெறி பயிலுநர்கள், சிறுவர் கழக ஆசிரியர்கள், பெற்றோர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.