நிலையான பொருளாதாரத்தைக் கட்டமைக்க எவ்வித அரசியல் நோக்கங்களும் இன்றி இலங்கைக்கு ஆதரவளிக்க சீன மக்கள் குடியரசு தயாரெனவும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் இணங்கிச் செயற்படுவதே தனது நோக்கமெனவும் சீன மக்கள் குடியரசின் ஜனாதிபதி ஷி ஜின்பிங் தெரிவித்தார்.
சீனாவிற்கான உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருக்கும் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் ஆகியோருக்கிடையிலான இருதரப்புச் சந்திப்பு நேற்று (20) சீன மக்கள் பொதுச் சபையில் நடைபெற்றது.
ஐக்கிய நாடுகள் பொதுச் சபை அமர்வில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நிகழ்த்திய உரையானது இலங்கையின் மூலோபாய அமைவிடத்தின் முக்கியத்தை எடுத்துக்காட்டியதாக சுட்டிக்காட்டிய சீன ஜனாதிபதி, இலங்கை கொண்டுள்ள மத்தியஸ்தமான நிலைப்பாட்டையும் பாராட்டினார்.