வெளிநாடு
மாலத்தீவிலிருந்து இந்திய படைகளை வெளியேறும்படி கோரிக்கை
மாலத்தீவு ஜனாதிபதியாக பதவியேற்றிருக்கும் மொஹமட் முய்சு

மாலத்தீவு ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்று ஜனாதிபதியாக பதவியேற்றிருக்கும் டாக்டர் மொஹமட் முய்சு, இந்தியாவைத் தனது படைகளை மாலத்தீவிலிருந்து வெளியேற்றும்படி கேட்டிருக்கிறார்.
“மாலத்தீவு மண்ணில் வெளிநாட்டு இராணுவத்தினர் இருப்பதை நாங்கள் விரும்பவில்லை. இதை மாலத்தீவு மக்களுக்கு நான் உறுதியளித்தேன். பதவியேற்கும் முதல் நாளிலிருந்தே எனது வாக்குறுதியை நிறைவேற்றப் பணி செய்வேன்.” என மாலத்தீவு ஜனாதிபதி டாக்டர் மொஹமட் முய்சு தெரிவித்துள்ளார்