இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் தேசிய வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு நடாத்தும் புத்தகக் கண்காட்சி நிகழ்வு முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தில் அமைந்துள்ள முல்லை மணிமண்டபத்தில் நாளை மற்றும் நாளைமறுத்தினம் 26 மற்றும் 27 ஆம் திகதிகளில் நடாத்துவதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன
இப்புத்தகக் கண்காட்சியில் அனைத்து வயதுப் பிரிவிற்கும் ஏற்ற பல நூற்றுக்கணக்கான புத்தகங்கள் காட்சிக்கு வைக்கப்படவுள்ளது.
பாடசாலை மாணவர்கள் ஆசிரியர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் உட்பட அனைவரையும் இக்கண்காட்சியில் பங்குபற்றுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளன
இக்கண்காட்சியில் பங்கு கொள்ளும் சுமார் 50 பாடசாலை நூலகங்களிற்கு இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்கள வெளியீடுகளின் ஒரு தொகுதி நூல்கள் இலவசமாக வழங்கப்பட உள்ளன.