crossorigin="anonymous">
உள்நாடுபொது

கொழும்பு நகரத்தில் ஐந்து வீட்டுத்திட்டங்கள்

கொழும்பு நகரத்தில் 05 வீட்டுத்திட்டங்கள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்னாண்டோ தெரிவித்தார்.

அதற்கான இணக்கப்பாட்டினை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சீன அரசாங்கத்துடன் செய்துகொண்டுள்ளார் என்றும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (26) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்னாண்டோ மேற்கண்டவாறு தெரிவித்தார்.

சிறு மற்றும் மத்தியத்தர மக்களுக்காக கொழும்பு நகரத்தில் 05 வீட்டுத்திட்டங்கள் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

2024 ஆம் வரவு செலவுத் திட்டத்தின் பின்னர் வீடமைப்பு அதிகார சபையில் தடைப்பட்ட திட்டங்களை மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 8 + 1 =

Back to top button
error: