crossorigin="anonymous">
உள்நாடுபொது

கிழக்கு மாகாண இராணுவ கட்டளை தலைமயகத்தின் இராணுவ தின நிகழ்வு

புதிய காத்தான்குடி அல் அக்ஸா பெரிய ஜும்ஆப் பள்ளிவாயலில்

கிழக்கு மாகாண இராணுவக் கட்டளை தலைமயகத்தின் 20ஆவது ஆண்டு பூர்த்தியைமுன்னிட்டு நிகழ்வொன்று புதிய காத்தான்குடி அல் அக்ஸா பெரிய ஜும்ஆப் பள்ளிவாயலில் அதன் தலைவர் அல் ஹாஜ் கே.எல்.எம். பரீட் அவர்களின் தலைமையில் நேற்று முன்தினம் (26) நடைபெற்றது.

கிழக்கு மாகாண கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் பிரசன்ன குணரத்ன மற்றும் ஏனைய இராணுவ உயர் அதிகாரிகள், இராணுவ வீரர்கள், நிர்வாக சபை உறுப்பினர்கள் மஹல்லாவாசிகள் பொதுமக்கள் ஊடகவியலாளர்கள் என பலரும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

சமூகத்தில் நடைபெறும் தவறுகளை பிழைகளை குற்றங்களை கட்டுப்படுத்தும் முகமாக பள்ளிவாயலும் இராணுவமும் இணைந்து எதிர்காலத்தில் பல்வேறுபட்ட செயற்பாடுகள் ஈடுபட வேண்டும் என்ற நன்னோக்கில் இந்நிகழ்வு எமது பள்ளிவாயலில் இடம்பெற்றது.

நிகழ்வின்போது, அங்கு வருகை தந்திருந்த கிழக்கு மாகாண கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் பிரசன்ன குணரத்ன அவர்களுக்கு, எமது பள்ளிவாயல் கௌரவ செயலர் அல் ஹாஜ் MIM இர்பான் அவர்களினால் புனித அல்-குர்ஆன் சிங்கள மொழியாக்கப் பிரதி ஒன்று நினைவாக வழங்கி வைக்கப்பட்டது.

இறுதியாக ஆயுட்கால இமாம் மௌலவி முஸ்தபா பலாஹி, பிரதம பேஷ் இமாம் அஷ் ஷேய்க் அல் ஹாபிழ் எம்.எம்.எம். இல்ஹாம் பலாஹி மற்றும் பேஷ் இமாம் அல் ஹாபிழ் எச். ஹாலித் அஹ்மத் பலாஹி ஆகிய மூவரும் இராணுவ உயர் அதிகாரிகளினால் அன்பளிப்புகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 92 − = 88

Back to top button
error: