அனைத்து பல்கலைக்கழக முஸ்லிம் மாணவர் ஒன்றியத்தின் வேண்டுகோளுக்கு இணங்க ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்திற்கும், அனைத்து பல்கலைக்கழக முஸ்லிம் மாணவர் ஒன்றியத்திற்கும் (All University Muslim Students Association) இடையிலான கலந்துரையாடலொன்று இன்று (29) மாலை கொழும்பு தெஹிவெளையில் இடம்பெற்றது
இக்கலந்துரையாடலில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரம் சார்பாக தலைவர் அல்ஹாஜ் என் எம் அமீன் , பொதுச் செயலாளர் ஜனாப் ஷிஹார் அனீஸ், உப செயலாளர் அல்ஹாஜ் எம். எஸ். எம். பாஹிம், முன்னாள் தலைவி புர்கான் பீ இப்திகார், தேசிய அமைப்பாளர் அல்ஹாஜ் என். ஏ. எம். ஸாதிக் ஷிஹான், இணையத்தள ஆசிரியர் ஜனாப் டீ. ஜி. எம்.எஸ்.எம். ராபி ஆகியோரும் மற்றும் அனைத்து பல்கலைக்கழக முஸ்லிம் மாணவர் ஒன்றியம் சார்பாக அதன் தலைவர் எம்.இசட்.எம்.ஹம்மாத், உப தலைவர் எம்.எஸ். எம்.சாபிர், ஆலோசனை குழு அங்கத்தவர் எம்.எஸ்.ஹினாஸ் அஹமத் ஆகியோர்களும் கலந்துகொண்டனர்
இக்கலந்துரையாடலில் பட்டதாரி மாணவர்களுக்கு ஊடகத்துறை சம்பந்தமான பயிற்சிகளை வழங்குவது தொடர்பில் ஆராயப்பட்டதுடன் அதற்கான முன்னெடுப்புக்களை தொடங்கவும் தீர்மானிக்கப்பட்டது