(அஷ்ரப் ஏ சமத்)
அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணி சம்மேளனத்தின் 50ஆவது வருட பொன் விழா மாநாடு நேற்று (29) ஞாயிற்றுக்கிழமை கொழும்பு -07ல் அமைந்துள்ள விளையாட்டு அமைச்சின் “டங்கன்வைட் ” கேட்போர் கூடத்தில் சம்மேளனத்தின் தலைவர் லுக்மான் சஹாப்தீன் அடுத்த ஆண்டுக்கான தலைவர் ஷாம் நவாஸ் ஆகியோர்கள் தலைமைகளில் நடைபெற்றது.
.
இம் மாநாட்டுக்கு எதிர்கட்சித் தலைவர் சார்பில் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமசிங்க,, இந்திய லோக சபையின் தமிழ் நாடு பாராளுமன்ற உறுப்பிணர் கே.நவாஸ் கனி, பலஸ்தீன் நாட்டின் இலங்கை்கான துாவர் கலாநிதி சுகையிர் ஹம்துல்லாஹ் செய்யட் ஆகியோர்களும் கலந்து சிறப்பித்தனர்.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள ஈரான் நாட்டின் துாதுவருமான எம்.எம். சுகைர் இங்கு சிறப்புரை நிகழத்தினார்.
பொன் விழா மாநாட்டை முன்னிட்டு தபால் திணைக்களத்தினால் 25 ருபா முத்திரையும் ஞாபகார்த்த தபால் உரையும் வெளியீட்டு வைக்கப்பபட்டன தபால் உரையின் முதற்பிரதி ஸதாபகத்தலைவர் காலம் சென்ற சபாநாயகர் பாக்கீர்மாக்கார் அவர்களின் புதல்வரும் முன்னாள் அமைச்சர், பாராளுமன்ற உறுப்பினருமான இம்தியாஸ் பாக்கீர் மாக்காரிடம் தபால் மா அதிபரினால் கையளிக்கப்பட்டது.
முஸ்லிம் லீக் வாலிப முன்னணியினால் தெரிபு செய்யப்பட்ட , ஜனாதிபதி சட்டத்தரனி எம்.எம். சுகைர், ,
அத்துடன் சம்மேளனத்தின் முன்னாள் தேசியத் தலைவர்களான என்.எம். அமீன், சிரேஸ்ட சட்டத்தரனிகளான என்.எம். சஹீட், ரசிட் எம். இம்தியாஸ், அக்கரைப்பற்று எம். ஜ. உதுமாலெப்பை, கலாநிதி பி.எம். பாருக், ஆகியோறுக்கும் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
வடக்கில் இருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் சம்பந்தமாக பொன்விழாவினை முன்னிட்டு கட்டுரைப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கிவைக்கப்பட்டது.
களுத்துரை, மன்னார். கொழும்பு பொலநருவை குருநாகால் போன்ற 10க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் அகில இலஙகை முஸ்லிம் லீக் வாலிப முன்னணியினால் களுத்துறை, புத்தளம், அநுராதபுரம் மாவட்டங்களில் நடாத்தப்பட்ட 150 க்கும் மேற்பட்ட இளைஞர் யுவதிகளும்
சட்டத்தரனி ரசீத் எம். இம்தியாஸ் ஆசிரியராகக் கொண்டு வெளியிடப்பட்ட பொன் விழா மலரும் வெளியீட்டு வைக்கப்பட்டது.
இந் நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான், மற்றும் ஏ.எச்.எம்.பௌசி, அலி சாஹிர் மௌலானா, பேராசிரியர் திஸ்ஸ விதாரன, போன்ற பாராளுமன்ற உறுப்பிணர்களும். பங்களதேஷ், இந்தோனேசியா, ஈரான், லிபியா, மலேசியா போன்ற நாடுகளின் துாதுவர்களும் சமுகமளித்திருந்தனர்.
20 மாவட்டங்களது முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளது கிளைகளின் பிரநிதிகளும் சமுகமளித்திருந்தனர் அத்துடன் அடுத்த ஆண்டின் புதிய தலைவராக ஷாம் நவாஸ் தெரிபு செய்யப்பட்டுள்ளார்