பிராந்தியம்
புத்தளம் நகரசபையின் “வருமுன் காப்போம்” டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்
புத்தளம் பிரதேசங்களில் “வருமுன் காப்போம்” திட்டத்திற்கமைய புத்தளம் நகரசபையினால் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்படவுள்ளது.
நாளை (01) புதன்கிழமை புத்தளம் ஐந்தாம் ஆறாம் வட்டாரங்களில் தெரிவு செய்யப்பட்ட பகுதிகளில் புத்தளம் சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் மற்றும் படையினருடன் இணைந்து புத்தளம் நகர சபை டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தை முன்னெடுக்கவுள்ளது.
டெங்கு நுளம்புகள் பெருகா வண்ணம் சுற்றுச்சூழலை சுத்தமான முறையில் வைத்துக் கொள்ளுமாறும், வருகை தரும் உத்தியோகத்தர்களுக்கு பூரண ஒத்துழைப்பு வழங்குமாறும் புத்தளம் நகர சபையின் சுகாதாரப் பிரிவு அதிகாரிகள் வேண்டிக்கொள்கின்றனர்.
நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக மீண்டும் டெங்கு நோய் பரவும் அபாயம் காணப்படுவதாக சுகாதாரப் பிரிவினர் எச்சரித்துள்ளனர்.