crossorigin="anonymous">
உள்நாடுபிராந்தியம்

மன்னாரில் மக்கள் மத்தியில் கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்த குழு

மன்னார் மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும், மக்கள் உரிய சுகாதார நடை முறைகளை கடை பிடிக்கின்றார்களா? என்பதனை ஆராய்ந்து பல்வேறு பிரச்சினைகளை தீர்க்கும் வகையில் இளைஞர்களைக் கொண்ட குழு அமைக்கப்பட்டு இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (25) தங்களுடைய பணியை ஆரம்பித்துள்ளனர்.

மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி டி மேல் தலைமையில் குறித்த குழு ஆரம்பிக்கப்பட்டு குழு உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு உடைகளை வழங்கி அவர்கள் மூலம் மக்கள் ஒன்று கூடுவதை தவிர்க்கும் செயல்பாட்டை மேற்கொள்ள ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது

மன்னார் பொது சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் றோய் பீரிஸ் தலைமையில் குறித்த பணியாளர்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்கி வைக்கப்பட்டதுடன் அதனைத் தொடர்ந்து மன்னார் பேரூந்து தரிப்பிட பகுதியில் தமது பணியை முன்னெடுத்தனர்.

மக்கள் உரிய முறையில் சுகாதார நடைமுறைகளை பின்பற்றுகின்றார்களா? வர்த்தக நிலையங்களில், பேரூந்துகள் போன்றவற்றில் மக்கள் உரிய சமூக இடை வெளியை பின் பற்றி முகக் கவசம் அணிந்தள்ளார்களா? என்பதை ஆராய்வதோடு, மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நடவடிக்கைகளையும் குறித்த இளைஞர் குழுவினர் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 72 + = 76

Back to top button
error: