(எம்.எஸ்.எம்.ஸாகிர்)
பலஸ்தீன் நாட்டு மக்களுக்கு ஆதரவாக, சர்வதேச பெளத்த சம்மேளனம் ஏற்பாடு செய்த அமைதி ஆர்ப்பாட்டமொன்று “யுத்தம் வேண்டாம்” எனும் தொனிப்பொருளில், கொழும்பு-07 பெளத்தாலோக மாவத்தையில் (31) செவ்வாய்க்கிழமை நேற்று இடம்பெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மஹா சங்கத்தினர்கள், பெளத்த, ஹிந்து, இஸ்லாம், கிறிஸ்தவ மற்றும் சிங்கள, தமிழ், முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவர்களென ஜாதி, மத வேறுபாடின்றி ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.