இலங்கை பாராளுமன்ற சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன மற்றும் ஜோர்ஜியா நாட்டின் பாராளுமன்ற சபாநாயகர் ஷல்வா பபுவாஷ்விலி அகியோருக்கிடையிலான சுமுகமான சந்திப்பு இடம்பெற்றது.
அங்கோலா நாட்டின் லுவாண்டா நகரில் நடைபெற்ற அனைத்துப் பாராளுமன்ற ஒன்றியத்தின் 147வது மாநாட்டில் கலந்துகொண்டிருந்த போதே இந்த சந்திப்பு இடம்பெற்றது.
இரு நாடுகளுக்குமிடையிலான இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்துவது தொடர்பில் இரண்டு சபாநாயகர்களும் கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டனர்.
பாராளுமன்ற உறுப்பினர்களான மொஹமட் முஸம்மில், மாயாதுன்ன சிந்தக்க அமல், ராஜிகா விக்ரமசிங்க மற்றும் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹனதீர ஆகியோர் இதன்போது கலந்துகொண்டனர்.