உள்ளூராட்சி வாரத்தினை முன்னிட்டு பூநகரியில் விளையாட்டுப் போட்டிகள்
பூநகரி பிரதேச சபை உள்ளூராட்சி வாரத்தினை முன்னிட்டு சனசமூக நிலையங்களுக்கிடையில் மாபெரும் மென்பந்து துடுப்பாட்ட சுற்றுப்போட்டி மற்றும் வலைப்பந்தாட்ட சுற்றுப்போட்டி ஆகியவற்றை ஏற்பாடு செய்துள்ளது.
பூநகரி பிரதேச இளைஞர்களின் விளையாட்டு திறனை வளர்க்கும் நோக்கில் பிரதேசத்தில் உள்ள சனசமூக நிலையங்களின் ஒற்றுமைப்பாட்டினை மேம்படுத்தும் வகையிலும் உள்ளூராட்சி வாரத்தினை முன்னிட்டு குறித்த சுற்றுப்போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
சுற்றுப்போட்டிகள் இம்மாதம் எதிர்வரும் 07.11.2023ம் திகதி செவ்வாய்க்கிழமை மற்றும் 08.11.2023ம் திகதி புதன்கிழமை இடம்பெறவுள்ளன.
முழங்காவில் விநாயகர் விளையாட்டு மைதானத்தில் மென்பந்து துடுப்பாட்ட சுற்றுப்போட்டியும், முழங்காவில் தேசிய பாடசாலை விளையாட்டு மைதானத்தில் வலைப்பந்தாட்ட சுற்றுப்போட்டியும் காலை 8.00 மணியளவில் ஆரம்பிக்கப்படவுள்ளன.
இந்த போட்டிகளில் பூநகரி பிரதேச சபை ஆளுகைக்குட்பட்ட வீர வீராங்கனைகள், சனசமூக நிலையத்தவர்களும் கலந்து கொள்வதுடன், பிரதேச இளைஞர்களின் விளையாட்டு திறனை வளர்க்கும் விதமாக அவர்களை ஊக்குவிக்க பிரதேச மக்கள் அனைவரும் கலந்துகொள்ளுமாறு பூநகரி பிரதேச சபையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.