“நிகழ்நிலைக் காப்பு” எனும் சட்டமூலம் தொடர்பாக உயர் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட தீர்மானம்
அரசியலமைப்பின் 121(1) ஆம் உறுப்புரையின் பிரகாரம் உயர் நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்தப்பட்ட “நிகழ்நிலைக் காப்பு” எனும் சட்டமூலம் தொடர்பாக உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு கௌரவ சபாநாயகருக்குக் கிடைக்கப்பெற்றுள்ளதாக பிரதி சபாநாயகர் கௌரவ அஜித் ராஜபக்ஷ இன்று (07) இலங்கை பாராளுமன்றத்திற்கு அறித்தார்.
சட்டமூலத்தின் அரசியலமைப்பு ரீதியான செல்லுபடியாகும் தன்மை பற்றிய உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு பின்வரும் விடயங்களை உள்ளடக்குகின்றன:–
(i) வாசகங்கள் 3, 5, 7, 9, 11, 12, 13, 14, 15, 16, 17, 18,19, 20, 21, 22, 23, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 36, 37, 42, 45, 53 மற்றும் 56 அரசியலமைப்பின் 84 (2) வது உறுப்புரையினால் தேவைப்படுத்தப்பட்டவாறு பாராளுமன்றத்தில் சிறப்பு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட வேண்டும்.
(ii) எவ்வாறாயினும், மேற்படி சட்டமூலத்தின் பல வாசகங்கள் தொடர்பான உயர்நீதிமன்ற தீர்மானங்களுக்கு உட்பட்டு, 3, 5, 7, 9, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 25, 26, 27, 28, 29 , 30, 31, 32, 36, 37, 42, 45, 53 மற்றும் 56 ஆம் வாசகங்கள் பாராளுமன்றத்தில் குழுநிலையில் திருத்தப்படுமாயின் சட்டமூலம் பாராளுமன்றத்தில் சாதாரண பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்படலாம்.
அதற்கமைய, மேற்படி விடயங்களுக்கு உட்பட்டு, இந்தச் சட்டமூலத்தின் எந்தவொரு ஏற்பாடும் அரசியலமைப்பிற்கு முரணாக இல்லை என்பது உயர் நீதிமன்ற த்தின் அபிப்பிராயமாகும்.
மேலே குறிப்பிடப்பட்டுள்ள பல வாசகங்கள் தொடர்பாக வழங்கப்பட்டுள்ள உயர்நீதிமன்ற தீர்ப்புக்களுக்கு உட்பட்டு, இந்தச் சட்டமூலம் பாராளுமன்றத்தில் சாதாரண பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்படலாம், என பிரதி சபாநாயகர் அறிவித்தார்.