crossorigin="anonymous">
பிராந்தியம்

எம். எஸ். காரியப்பர் வித்தியாலயத்தில் அலங்கரிக்கப்பட்ட வகுப்பறைகள் திறந்து வைப்பு

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

சாய்ந்தமருது எம். எஸ். காரியப்பர் வித்தியாலயத்தில் கவின் கலையுடன் கூடிய அலங்கரிக்கப்பட்ட வகுப்புக்களை திறந்து வைக்கும் நிகழ்வு இன்று புதன்கிழமை (08) காலை 08.30 மணிக்கு பாடசாலையில் நடைபெறும்.

மேற்படி பாடசாலையின் ஆரம்ப நெறி ஆசிரியர்களினால் குறித்த வகுப்பு மாணவர்களுடைய பெற்றோர்களின் பங்களிப்புடன் ஆசிரியைகளின் சொந்த நிதியிலிருந்தும் ஆரம்ப நெறி வகுப்பறைகளை மிகவும் சிறப்புடன் கவின் கலையுடன் கூடிய கற்பித்தல் செயற்பாடுகளுக்கு ஏற்ற கலை உணர்வுடன் அலங்கரிக்கப்பட்ட வகுப்பறையாக மாற்றியமைத்து, காட்சிப்படுத்தப்படவுள்ளது.

பாடசாலையின் அதிபர் எம்.எஸ்.எம். ஆரிப் தலைமையில் இடம்பெறும் இந்நிகழ்வில், சாய்ந்தமருது கோட்டக்கல்விப் பணிப்பாளர் என்.எம்.மலிக் பிரதம அதிதியாகக் கலந்து கொள்வதோடு, விசேட அதிதிகளாக, சாய்ந்தமருது – மாளிகைக்காடு ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் தலைவர் ஏ.ஹிபத்துல் கரீம், ஆரம்பப் பிரிவு உதவிக்கல்விப் பணிப்பாளர் ஏ.எல்.எம். ஜஹாங்கிர், ஆசிரிய ஆலோசகர்களான யூ.கே. அன்சார், எம்.எம்.எம்.றபீக், முன்னாள் ஆசிரிய ஆலோசகர் ஏ. சஹ்ரூன், பாடசாலையின் ஸ்தாபக அதிபர் ஏ.எல்.ஏ. நாபித் பாடசாலை அபிவிருத்திச் சங்க செயலாளர் நாஸர், பாடசாலைக்கு சகல விதத்திலும் உதவி வருகின்ற ஊடகவியலாளர்களான சமுர்த்தி முகாமைத்துவப் பணிப்பாளர் றியாத் ஏ.மஜீத் மற்றும் செய்தியாசிரியர் பல்துறைக்கலைஞர், கலைச்சுடர் எம்.எஸ்.எஸ்.ஸாகிர் உட்பட பாடசாலை ஆரம்பப் பிரிவின் 1ஆம் ஆண்டின் வகுப்பாசிரியைகளான எம்.பி. பாயிஸா, என்.எப். பைஸால், 02ஆம் ஆண்டு வகுப்பாசிரியை கே. ஹப்ஸா, 03ஆம் ஆண்டு வகுப்பாசிரியை ஏ.எஸ். ஐனுல் சஜானா, 04ஆம் ஆண்டு வகுப்பாசிரியை எஸ்.எச். மர்சுக்னா, 05ஆம் ஆண்டு வகுப்பாசிரியை ஏ.டபிள்யூ. றினோஸியா மற்றும் ஏனைய வகுப்பு ஆசிரிய, ஆசிரியைகள், பெற்றோர்கள் எனப் பலரும் கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளனர்.

வறுமைக்கோட்டின் கீழ் வாழும் மிகவும் வறிய, பின்தங்கிய நிலையிலுள்ள மாணவர்கள் கல்வி பயிலும் இப்பாடசாலையில் கலாசார விழுமியங்கள் அடங்கிய தேவைப்பாடு கள் பாடசாலையில் இருக்கின்றபடியால், தனவந்தர்கள் மற்றும் பரோபகாரிகளின் உதவிகளை பாடசாலை எதிர்பார்த்து நிற்கின்றது. முடியுமானவர்கள் இப்பாடசாலைக்கு தாராளமாக உதவிகளை வழங்கலாம்.

இப்பாடசாலையில் தரம் 01 முதல் தரம் 09 வரை சுமார் 320 மாணவர்கள் மிகவும் குறைந்த வசதிவாய்ப்புகளுடன் கல்வி கற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer + 38 = 40

Back to top button
error: