crossorigin="anonymous">
உள்நாடுபொது

2030 ஆண்டாகும்போது அனைவருக்கும் ஆங்கிலம் வேலைத்திட்டம்

பல்கலைக்கழக மாணவர்களுக்கும் ஆங்கிலம் வேலைத்திட்டம்

மொழி அறிவை தமிழ், சிங்கள மொழிகளுக்கு மாத்திரம் மட்டுப்படுத்த முடியாது, ஏனைய மொழி அறிவையும் மாணத் தலைமுறைக்கு வழங்க வேண்டும் என்பதால் 2030 ஆம் ஆண்டாகும்போது அனைவருக்கும் ஆங்கிலம் என்ற திட்டம் நாட்டின் அனைத்து பாடசாலைகளிலும் நடைமுறைப்படுத்தப்படும் என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

பல்கலைக்கழக மாணவர்களுக்கும் ஆங்கில அறிவைப் பெற்றுக்கொடுப்பதற்கு அவசியமான வேலைத்திட்டம் தயாரிக்கப்படும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று (16) நடைபெற்ற, டீ.எஸ் சேனநாயக்க கல்லூரியின் ஸ்தாபகரும் தலைசிறந்த கல்வியலாளருமான மறைந்த ஆர்.ஐ.டி அலஸின் 10 ஆவது நினைவு தின நிகழ்வில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன்போது ஆர்.ஐ.டி அலஸின் 10 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு “மாகே மங்பெத” என்ற சுயசரிதை நூலும் வெளியிடப்பட்டது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 85 − = 76

Back to top button
error: