crossorigin="anonymous">
உள்நாடுபொது

வருமானம் ஈட்டும்வகையில் இலத்திரனியல் கடல்சார் விளக்கப்படங்களை உருவாக்க சட்ட திருத்தம்

இலங்கை கடற்பரப்பிற்கு அருகில் பயணிக்கும் கப்பல்கள் மூலம் நாட்டுக்கு வருடாந்தம் சுமார் 200 மில்லியன் டொலர் வருமானம் ஈட்டும் வகையில் இலத்திரனியல் கடல்சார் விளக்கப்படங்களை (Electronic Navigation Charts) உருவாக்க தேசிய நீரியல் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட வேண்டும் என்று பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் தெரிவித்தார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (24) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் இவ்வாறு தெரிவித்தார்.

நாரா நிறுவனத்துடனான ஒப்பந்தத்தின் பிரகாரம் தற்போதுள்ள கடல்சார் வரைபடங்கள் பிரித்தானிய நீரியல் அலுவலகத்தினால் செயற்படுத்தப்படுவதாகவும், எனவே எதிர்காலத்தில் இலத்திரனியல் கடல்சார் விளக்கப்படங்களை உருவாக்கும் பொறுப்பை கடற்படையிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 27 − 21 =

Back to top button
error: