50 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள் டெங்கு அதி அபாயம் நிலவும் பிரிவுகளாக பதிவாகியுள்ளதுடன் இந்த மாதத்தில் மாத்திரம் நாடளாவிய ரீதியில் 6,884 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் அதிகளவான டெங்கு நோயாளர்கள் கொழும்பு மாவட்டத்திலேயே பதிவாகியுள்ளனர். இதற்கமைய, கொழும்பு மாவட்டத்தில் 15,953 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கம்பஹா மாவட்டத்தில் 14,912 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். களுத்துறை மாவட்டத்தில் 4672 நோயாளர்களும் கண்டி மாவட்டத்தில் 7482 நோயாளர்களும் பதிவாகியுள்ளனர்.
கிழக்கு மாகாணத்தில் வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 6,197 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.