இலங்கைக்கான எகிப்து தூதுவர் மஜீட் மொஸ்லே (Maged Mosleh) அண்மையில் சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தனவை இலங்கை பாராளுமன்றத்தில் சந்தித்தார்.
எகிப்து மற்றும் இலங்கைக்கிடையில் காணப்படும் 66 வருட இரு தரப்பு உறவுகள் தொடர்பில் சபாநாயகர் மற்றும் தூதுவருக்கிடையில் கலந்துரையாடல் இடம்பெற்றது. இதனை முன்னிட்டு நினைவு முத்திரை வெளியிடுதல் மற்றும் இலங்கை – எகிப்து பாராளுமன்ற நட்புறவு சங்கத்தை மீள ஸ்தாபித்தல் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது.
இரு நாடுகளுக்கும் இடையில் காணப்படும் தொடர்புகளை மேலும் வலுப்படுத்துவதற்குப் பல்வேறு துறைகளிலும் மேற்கொள்ளக்கூடிய நடவடிக்கைகள் தொடர்பில் இதன்போது மேலும் கலந்துரையாடல் இடம்பெற்றது.
இதன்போது பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீரவும் கலந்துகொண்டார்.