மலைநாட்டினைப் பாதுகாத்தல் பற்றிய பாராளுமன்ற ஒன்றியத்தின் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ வசந்த யாப்பாபண்டார தெரிவு செய்யப்பட்டார்.
ஒன்றியத்தின் ஸ்தாபகக் கூட்டம் அண்மையில் (06) பாராளுமன்றத்தில் இடம்பெற்றதுடன், அவரது பெயரை பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ (கலாநிதி) வீ. இராதாகிருஷ்ணன் பிரேரித்ததுடன், அதனை பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ நிமல் பியதிஸ்ஸ வழிமொழிந்தார்.
அதன்பின்னர், கௌரவ (கலாநிதி) வீ. இராதாகிருஷ்ணன் மற்றும் கௌரவ நிமல் பியதிஸ்ஸ ஆகியோர் ஒன்றியத்தின் இணை உப தலைவர்களாக நியமிக்கப்பட்டனர்.
மலைநாடு மற்றும் மலைப்பகுதிகளைப் பாதுகாப்பதன் அவசியம் தொடர்பில் ஒன்றியத்தின் புதிய தலைவர் வலியுறுத்தியதுடன், ஒன்றியத்தின் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பில் இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் கௌரவ நிமல் பியதிஸ்ஸ, கௌரவ (கலாநிதி) வீ. இராதாகிருஷ்ணன், கௌரவ வருண லியனகே, கௌரவ டபிள்யு.எச்.எம். தர்மசேன, கௌரவ மொஹமட் முஸம்மில், கௌரவ அப்துல் ஹலீம், கௌரவ உதயன கிரிந்திகொட மற்றும் கௌரவ வீரசுமன வீரசிங்க ஆகியோர் கலந்துகொண்டனர்.