கண்டி, இந்திய உதவி உயர்ஸ்தானிகராலயம் நூற்றாண்டு விழாவின் ஒரு பகுதியாக இலங்கை அஞ்சல் திணைக்களத்துடன் இணைந்து நினைவு அஞ்சல் முத்திரையொன்றை (07) வெளியிட்டது.
இந்நிகழ்வில் மத்திய மாகாண ஆளுநர்லலித் யு. கமகே, ஊவா மாகாண ஆளுநர்ஏ,ஜே.எம். முஸம்மில், கல்வி இராஜாங்க அமைச்சர் ஏ. அரவிந்த் குமார், இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே, மாண்புமிகு பா. உஎம். வேலு குமார், இலங்கை அஞ்சல் திணைக்களத்தின் பிரதி அஞ்சல்மா அதிபர்டி.ஏ. ராஜித, கெ.ரணசிங்க, இந்திய உதவி உயர்ஸ்தானிகர் டாக்டர் ஆதிராஎஸ், மூத்த அரச அதிகாரிகள், புலம்பெயர்ந்த இந்திய உறுப்பினர்கள் மற்றும் உதவி உயர் ஸ்தானிகராலயத்தின் முன்னாள் அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.