சிறுவர் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு வழங்கும் செயலமர்வு
தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையினால் “யாழ் மாவட்ட தங்குமிட விடுதி உரிமையாளர்களுக்கு சிறுவர் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு வழங்கும் செயலமர்வு” மாவட்ட அரசாங்க அதிபர் திரு.அம்பலவாணர் சிவபாலசுந்தரன் அவர்கள் தலைமையில் நேற்று (14) மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
கலந்துரையாடலில் சிறுவர் பாதுகாப்பு மற்றும் சிறுவர் தொழிலாளர் தொடர்பான சட்டங்கள், சிறுவர் கடத்தப்படுதல் மற்றும் விற்கப்படுதல், சிறுவர்கள் பாலியல் தொழிலுக்காக பயன்படுத்தப்படுதல் மற்றும் அதனை தடுப்பதற்கான வழிமுறைகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டன.
இக் கலந்துரையாடலில் வளவாளர்களாக யாழ் பல்கலைக்கழக சட்டத்துறை தலைவர் திருமதி கோசாலை மதன், உதவி பொலிஸ் அத்தியட்சகர் திரு.எம்.எஸ்.எம்.ஜெரூல்ட் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதில் மாவட்ட செயலக சிறுவர் மற்றும் பெண்கள் பிரிவு உத்தியோகத்தர்கள் , சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் மாவட்ட தங்குமிட விடுதி உரிமையாளர்கள் , பராமரிப்பாளர்கள் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தார்கள்.