இலங்கை மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம், வருமான அனுமதிப்பத்திரம் பெற்றுக்கொள்ளாத வாகனங்கள் தொடர்பான தகவல்களை திரட்ட நடவடிக்கை எடுத்துள்ளது.
அனைத்து மாகாண சபைகளிடமிருந்தும் 05 வருடங்களுக்கு அதிகக் காலம் வருமான அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொள்ளாத வாகனங்கள் தொடர்பில் தகவல்களை கோரியுள்ளதாக மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் நிஷாந்த வீரசிங்க தெரிவித்துள்ளார்