crossorigin="anonymous">
பிராந்தியம்

மட்டக்களப்பில் போதைப்பொருள் தகவல் வழங்க தொலைபேசி இலக்கம்

மட்டக்களப்பில் போதைப்பொருள் தொடர்பாக தகவல் வழங்க 0718598840

மட்டக்களப்பில் போதைப்பொருள் வியாபாரிகள் தொடர்பாக தகவல் வழங்குபவரின் தொலைபேசி இலக்கம் பொலிஸாரின் தொலைபேசிக்கு காட்டாத 0718598840 என்ற புதிய தொலைபேசி இலக்கத்தின் ஊடாக போதை வியாபாரிகளது தகவலை வழங்குமாறு சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் அமல் ஏ.எதிரிமான பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்தில் சனிக்கிழமை (16) புதிய தொலைபேசி இலக்கம் அறிமுகம் செய்து வைத்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

பதில் பொலிஸ் மா அதிபரின் விசேட போதைப்பொருள் ஒழிப்பு திட்டத்தின் கீழ் பொதுமக்களிடமிருந்து போதைப்பொருள் வியாபாரிகளது தகவலை பெறுவதற்கான புதிய பெறிமுறையாக இந்த தகவல் வழங்குபவரின் தொலைபேசி இலக்கம் பொலிசாருக்கு காட்டாத புதிய முறையை அறிமுகப்படுத்தியுள்ளார்.

இந்த புதிய பொறிமுறைக்கமைய மாவட்டத்தில் போதைப்பொருளை ஒழுப்பது தொடர்பாக மாவட்டதிலுள்ள 14 பொலிஸ் நிலைய பிரதேசங்களில் இந்த புதிய தொலைபேசி இலக்கத்தை பொதுமக்கள் பார்வைக்கு காட்சிபடுத்தப்படும்.

எனவே பொதுமக்கள் பயமின்றி போதைப்பொருள் வியாபாரிகள் தொடர்பான தகவல்களை அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 0718598840 என்ற இலக்கத்தின் ஊடாக அறியப்படுத்தி இந்த மாவட்டத்தில் மட்டுமல்ல இந்த நாட்டிலுள்ள எதிர்கால சந்ததிகளை இந்த போதைப்பொருள் பாவனையில் இருந்து மீட்பதற்காக போதைப்பொருள் வியாபாரிகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பொதுமக்களிம் கோரிக்கை விடுத்துள்ளார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer − 2 = 8

Back to top button
error: