மத்திய, வடக்கு , கிழக்கு, மேல், தென், சப்ரகமுவ, 6 மாகாணங்களில் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுவதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் பணிப்பாளர் நளின் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.
பருவப் பெயர்ச்சி மழை தீவிரமடைந்துள்ள நிலையில், டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.
வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 82036 பேர் டெங்கு காய்ச்சலால் பீடிக்கப்பட்டுள்ளனர்.
இந்த வருடத்தில் 49 டெங்கு மரணங்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.