crossorigin="anonymous">
பிராந்தியம்

கிழக்கு மாகாண அஞ்சல் கட்டட தொகுதி மட்டக்களப்பில் திறந்து வைப்பு

மட்டக்களப்பில் புதிதாக நிர்மானிக்கப்பட்ட கிழக்கு மாகாண அஞ்சல் நிர்வாக கட்டட தொகுதி போக்வரத்து, நெடுந்சாலைகள் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்த்தனவினால் இன்று (06) திறந்து வைக்கப்பட்டது.

கிழக்கு மாகாண பிரதி அஞ்சல் மா அதிபதி எம்.எச்எம்.அஸ்லம் தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் ஊடகத்துறை இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார, கிராமிய வீதிகள் இராஜாங்க அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன், வர்த்தக இராஜாங்க அமைச்சரும் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் இணைதலைவருமாகிய சதாசிவம் வியாழேந்திரன் உள்ளிட்டோர் சிறப்பு அதிதிகளாக கலந்து கொண்டனர்.

2019ம் ஆண்டு அஞ்சல் திணைக்களத்தின் 448 மில்லியன் நிதி ஒதுக்கீட்டின் கீழ் அஞ்சல் நிர்வாகத் கட்டடத்தொகுதியின் நிர்மானபணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டிருந்த நிலையின் அதன் நிர்மானப்பணிகள் நிறைவடைந்து மக்கள் பாவனைக்கு இன்று கையளிக்கப்பட்டுள்ளது.
இந் நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.ஜே.ஜே. முரளிதரன், வெகுசன ஊடக அமைச்சின் செயலாளர் அனுஷ பல்பிட, அஞ்சல் மா அதிபதி ருவன் சத்துமார மற்றும் திணைக்களங்கள் சார் பல உயர் அதிகாரிகளும் இந்நிகழ்வில் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்துள்ளனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 7 + 2 =

Back to top button
error: