நிகழ்நிலை பாதுகாப்பு சட்டமூலம் இன்றும் (23) நாளையும் (24) இலங்கை நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக்ெகாள்ளபட உள்ளது.
58 சர்வதேச சிவில் சமூக மற்றும் மனித உரிமை குழுக்கள் இலங்கையில் உத்தேச நிகழ்நிலை காப்பு சட்டமூலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது
பலரது எதிர்ப்புகளுக்கும் சர்ச்சைகளுக்கும் வழிவகுத்துள்ள உத்தேச நிகழ்நிலை காப்பு சட்டமூலம் கருத்து சுதந்திரத்தை கடுமையாக கட்டுப்படுத்தக்கூடுமெனவும், ஜனநாயக விழுமியங்களுக்கு தீங்கு விளைவிக்கும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளன.
ஊடகவியலாளர்களை பாதுகாப்பதற்கான குழு உள்ளிட்ட 58 அமைப்புகள், உத்தேச நிகழ்நிலை காப்பு சட்டமூலத்தை மீளப்பெறுமாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸிடம் கோரிக்கை விடுத்துள்ளன.
அத்துடன், சிவில் சமூகம் மற்றும் மனித உரிமை நிபுணர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரினதும் ஆலோசனைக்கு அமைய, அதனை தயாரிக்க வேண்டுமென ஊடகவியலாளர்களை பாதுகாப்பதற்கான குழு கேட்டுக்கொண்டுள்ளது.